கமுதி,-கமுதி அருகே கே.வேப்பங்குளம் கிராமத்தில் பழனி ஆண்டவர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
இதில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட மாடுகள், சாரதிகள் கலந்து கொண்டனர்.
பூஞ்சிட்டு, இளம் ஜோடி இரட்டை மாட்டு வண்டி தனித்தனியாக இரண்டு பிரிவாக நடைபெற்றது. முதல் நான்கு இடங்களை பிடித்த மாடுகள், சாரதிகளுக்கு ரொக்கப்பரிசுகள், குத்து விளக்கு கிராமத்தின் சார்பில் வழங்கப்பட்டது.