திருவாடானை,-திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் தேர் சக்கரங்களை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தினர்.
திருவாடானையில் பழமைவாய்ந்த ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் வைகாசி விசாகம், ஆடிப்பூர திருவிழா ஆண்டு தோறும் விமரிசையாக நடைபெறும். வைகாசி தேரோட்டத்தில் ஆதிரெத்தினேஸ்வரர் பிரியாவிடையுடன் ஒரு தேரிலும்,சிநேகவல்லி அம்மன் மற்றொரு தேரிலும் வீதி உலா செல்வார்கள்.
ஆடியில் சிநேகவல்லி அம்மன் தேரோட்டம் நடைபெறும். பழமை வாய்ந்த இந்த தேர் சக்கரங்கள் சில ஆண்டுகளுக்கு முன் இரும்பு சக்கரங்களால் அமைக்கப்பட்டது. சக்கரங்களுக்கு நடுவில் அமைக்கப்பட்ட மரத்தாலான தேர்கள் சிதிலமடைந்துள்ளது. வைகாசி விசாக திருவிழாவின் நடந்த தேரோட்டத்தில் அந்த சக்கரங்களை பார்த்த பக்தர்கள் கவலையடைந்தனர். இருந்த போதும் தேர்கள் பாதுகாப்பாக இழுத்து வரப்பட்டது.
பொதுமக்கள் கூறுகையில், சக்கரம் சிதிலமடைந்துள்ள நிலையில் தேர் இயக்கப்பட்டது. இரும்பு சக்கரங்களை இணைக்கும் மரத்தால் ஆன அச்சுகளும் சிதிலமடைந்துள்ளது. தேர்களை அலங்காரம் செய்யும் கம்புகள், கலசத்தை தாங்கும் வகையில் இல்லாமல் பலமிழந்து உள்ளது.
இரு தேர்களையும் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
Advertisement