அனுப்பர்பாளையம்;திருப்பூர் பாத்திர தொழிலாளர்களுக்கு சம்பள ஒப்பந்தம் கடந்த டிச., 31ம் தேதியுடன் நிறைவு பெற்றது.
புதிய சம்பள ஒப்பந்தம் குறித்து, அனைத்து தொழிற் சங்க கூட்டு கமிட்டியினர். எவர்சில்வர் மற்றும் பித்தளை பாத்திர உற்பத்தியாளர் சங்கத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், எவர் சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்க மகாசபை கூட்டம் அனுப்பர்பாளையம் சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. சங்க தலைவர் துரைசாமி, தலைமை வகித்தார். பொருளாளர் ராஜேந்திரன், முன்னிலை வகித்தார்.
தொழில் மந்த நிலையில் உள்ளதால், சம்பள பேச்சுவார்த்தையை ஒரு ஆண்டு ஒத்திவைப்பது, அதுவரை பழைய சம்பள ஒப்பந்தத்தை கடை பிடிப்பது என பெரும்பான்மையினர் தங்கள் கருத்தை தெரிவித்தனர். இதனை, தொழிற்சங்க கூட்டு கமிட்டிக்கு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.
Advertisement