ராமநாதபுரம்--ராமநாதபுரத்தில் புதியதோர் சமூக அறநெறியை நோக்கி பயணம் வாக்கத்தானில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் தானம் அறக்கட்டளை சார்பில் சமூக அறநெறிக்கான விழிப்புணர்வு வாக்கத்தான் ராமநாதபுரம் அரண்மனையில் துவங்கி கோட்டை வாசல் விநாயகர் கோயில் தெரு, சாலை தெரு வழியாக மதுரை ரோட்டில் ராஜா பள்ளி மைதானம் வரை நடந்தது.
கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார் துவக்கி வைத்தார். தானம் அறக்கட்டளை தலைவர் வெள்ளையப்பன், செயலாளர் செல்லப்பாண்டியன் மற்றும் அறக்கட்டளை பயனாளிகள், விவசாயிகள்,மீனவர்கள், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
ஊழலற்ற சமூகம், மதுவின் தீமை, எங்கும் சமத்துவம், அனைத்திலும்அறநெறி போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். ராஜா பள்ளி மைதானத்தில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விசுபாவதி பங்கேற்றனர்.
Advertisement