ரெகுநாதபுரம்,-மண்டபம் ஊராட்சி ஒன்றியம் புதுமடம் அருகே சூரங்காட்டு வலசையை சேர்ந்தவர் சுதந்திரப் போராட்ட தியாகி சுப்பையா. இவர் மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இவரது மனைவி தேனம்மாள் 97.
சுதந்திர போராட்ட தியாகியின் மனைவியான தேனம்மாளுக்கு மரியாதை செலுத்தும் பொருட்டு காமராஜ் பவுண்டேஷன் ஆப் இந்தியா சார்பில் அவரது வீட்டிற்கு சென்றனர். அங்கு மூதாட்டிக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். அப்போதைய சுதந்திர போராட்ட மலரும் நினைவுகளை மூதாட்டி பரிமாறிக் கொண்டார்.
காமராஜ் பவுண்டேஷன் ஆப் இந்தியா நிர்வாகிகள்சம்சுல் கபீர், அப்துல் பாசித், நற்றமிழ்செல்வன், குகன், அபுதாகிர், ஊராட்சி தலைவர் பரமேஸ்வரி, பத்மநாபன், நாட்டாமை சேதுபதி உட்பட பலர் பங்கேற்றனர்.
Advertisement