ராமநாதபுரம்,--ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் குரூப் 3 ஏ தேர்வுகளில் 971பேர் ஆப்சென்ட் ஆகினர்.
டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் குரூப் 3ஏ தேர்வுகள் ராமநாதபுரத்தில் உள்ள ஏழு மையங்களில் நடந்தது. புள்ளியியல் துறை பணிகளுக்கான இந்த தேர்விற்கு 2073 பேர் விண்ணப்பித்து இருந்தனர். நேற்று 1102 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 971பேர் ஆப்சென்ட் ஆனார்கள்.
தேர்வு நடந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணித்தனர். வருவாய்த்துறை அதிகாரிகள் ஒவ்வொரு தேர்வு மையத்திலும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். தேர்வு மையங்களில் வீடியோ பதிவு செய்யப்பட்டது. இன்றும் ராமநாதபுரத்தில் மூன்று தேர்வு மையங்களில் 990 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
Advertisement