தேவையான பொருள்கள் :
n பச்சரிசி மாவு -1/2கிலோn தேங்காய் - 1/2 மூடி துருவியதுn கரும்பு சர்க்கரை - 200 கிராம்n ஏலக்காய் - 5 n நெய்- ஒரு டேபிள் ஸ்பூன்n நிலக்கடலை -150 கிராம் (வறுத்தது)n கருப்பு எள்- 100 கிராம் (வறுத்தது)n சுடு தண்ணீர், உப்பு தேவையான அளவு
செய்முறை : நிலக்கடலை, எள், ஏலக்காய் ஆகியவற்றை மிக்சியில் குருணையாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். சர்க்கரை மற்றும் துருவிய தேங்காய் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து பிசைந்து பூரணம் தயார் செய்து வைத்துக்கொள்ளவும். அரை லிட்டர் அளவு சுடு தண்ணீர் வைத்து, அரிசி மாவை உருட்டும் பதத்துக்கு பிசைந்து 15 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
கையில் நெய் தடவிக்கொண்டு மாவை உருண்டை பிடித்து, பூரணத்தை நடுவில் வைத்து, அரை வட்ட வடிவத்தில் மடித்து மாவின் ஓரத்தை விரல் வைத்து அழுத்தி இணைக்க வேண்டும். உங்களுக்கு விரும்பிய வடிவத்தில் உருண்டையாகவோ, முக்கோணமாகவோ செய்து கொள்ளலாம். பின்னர் அவற்றை இட்லித் தட்டில் வைத்து வேக வைத்து எடுக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி போன்ற விஷேச தினங்களில் செய்து சாமிக்கு படைக்கலாம்.
Advertisement