அவிநாசி:'ஈஷா' அறக்கட்டளையின் 'மண் காப்போம் திட்டம்' விழிப்புணர்வுக்காக, அவிநாசி வந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் நாதலிமாசீ, 50. ஈஷா அறக்கட்டளையின், 'மண் காப்போம் திட்டம்' விழிப்புணர்வுக்காக, 2022 ஜூன் 21ல், சைக்கிள் பயணம் துவக்கினார். இத்தாலி, சுலேபேனியா, செர்பியா, பல்கேரியா, துருக்கி, அரபு அமீரகம், ஓமன் உட்பட பத்து நாடுகளை கடந்து, இந்தியாவுக்கு வந்தார். அவ்வகையில், அவிநாசிக்கு நேற்று வந்த அவருக்கு, 'களம்' அறக்கட்டளை தன்னார்வலர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
நாதலிமாசீ கூறுகையில், ''கோவை ஈஷா யோகா மையம் நடத்தும் மண் காப்போம் திட்டத்தில் கலந்து கொள்ள, இப்பயணம் மேற்கொண்டுள்ளேன். மண் வளத்தின் முக்கியத்துவம், வருங்கால சமுதாயத்துக்கு மண்ணின் பயன்களை, வரும் வழியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பல நாடுகளில் பொதுமக்களை சந்தித்து பேசினேன். இதுவரை, 8 ஆயிரம் கி.மீ., சைக்கிளில் பயணம் செய்துள்ளேன்,'' என்றார். அதன்பின், அவர் கோவை நோக்கி பயணித்தார்.
Advertisement