வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
வாஷிங்டன்,-பிரபல தொழிலதிபர் ஜெப் பெசோஸ் நடத்தும் 'புளூ ஆரிஜின்' நிறுவனம் சார்பில் பெண்கள் மட்டும் பயணிக்கும் விண்வெளி பயணத்தை அவருடைய தோழி லாரன் சாஞ்சஸ் வழிநடத்த உள்ளார்.
![]()
|
'அமேசான்' நிறுவனத் தலைவர் ஜெப் பெசோஸ் நடத்தும், புளூ ஆரிஜின் நிறுவனம் சார்பில் விண்வெளி ஆராய்ச்சி நடத்தப்படுகிறது.
இந்த நிறுவனம் சார்பில் இதுவரை ஆறு முறை விண்வெளிக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதை தவிர, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவின் விண்கலங்களையும் இந்த நிறுவனம் வெற்றிகரமாக செலுத்திஉள்ளது.

இந்த நிறுவனத்தின் சார்பில் அடுத்த விண்வெளி பயணத்தை அவருடைய தோழி லாரன் சாஞ்சஸ் வழிநடத்த உள்ளார். அவருடன் மேலும் ஐந்து பெண்கள் செல்ல உள்ளனர்.
அடுத்தாண்டு துவக்கத்தில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதுபோல் பயணிக்கும் மற்றவர்கள் குறித்தும் தகவல் வெளியிடப்படவில்லை.
Advertisement