கோவை:கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள, நாகசாயி மந்திர் கும்பாபிஷேக விழாவில், இன்று இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன.
மேட்டுப்பாளையம் சாலை ராமலிங்கம் காலனியிலுள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலிலிருந்து, ஸ்ரீ நாகசாயி மந்திருக்கு தீர்த்தக்குடங்களை எடுத்துச்செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7:00 மணிக்கு மங்கள இசையும், விக்னேஷ்வர பூஜையும், நாகசாயிக்கு மஹா அர்ச்சனையும், மஹா தீபாராதனையும் நடந்தன.
நேற்று காலை 8:00 மணிக்கு மங்கள இசை, ஆலய பிரதக்ஷனம், வேத ஸ்வஸ்தி, கோபூஜை, காப்பு கட்டும் கங்கணதாரணம், மஹா தீபாராதனை நடந்தது.
மாலை 4:00 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜைகள் துவங்கின.
தொடர்ந்து மங்கள இசை, மண்டப ஆராதனை, வாஸ்து ஹோமம், பூர்ணாஹுதி மற்றும் மஹாதீபாராதனை ஆகியவை நடந்தன.
இன்று காலை 8:00 மணிக்கு, இரண்டாம் கால வேள்வி யாகசாலை பூஜைகளும், மங்கள இசை, வேதபாராயணம், பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனையும் நடக்கிறது.
மாலை 4:00 மணிக்கு, சகல தேவதா ஆவாஹன பூஜைகள், மங்கள இசை, மண்டல ஆராதனை மற்றும் மஹா தீபாராதனை நடக்கின்றன.
Advertisement