புனே,-மஹாராஷ்டிராவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 12வது மாடியிலிருந்து மகனை கீழே தள்ளி கொலை செய்துவிட்டு, தந்தையும் கீழே குதித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மஹாராஷ்டிராவின் வாகாத் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 12வது மாடியில் வசித்து வந்த தந்தையும், மகனும் கீழே விழுந்து இறந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலறிந்து வந்த போலீசார், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார், வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், தந்தையும், மகனும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும், இருவரும் இதற்காக சிகிச்சை எடுத்து வந்ததும் தெரிய வந்துஉள்ளது.
தனக்கு மனநிலை பாதிக்கப்பட்ட விரக்தியில், தந்தை தன் மகனை மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்தவுடன், சிறிது நேரத்தில் அவரும் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்கொலை நிகழ்ந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
Advertisement