மீரட், உத்தர பிரதேசத்தில் தேசிய கீதத்தை அவமதித்த மூன்று இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், ஒருவரை கைது செய்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஈத்கா பகுதி யில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, அதை அவமதிக்கும் வகையில் நடனமாடிய மூன்று இளைஞர்களின் 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி, அந்த இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
இந்த வீடியோவில், ஒரு இளைஞர் தேசிய கீதம் ஒலிக்கும் போது ஆபாசமாக நடனமாடுகிறார். அதற்கு அவரது இரு நண்பர்கள் கைதட்டி சிரிக்கின்றனர்.
இதையடுத்து தேசிய கீதத்தை அவமதித்ததற்காக மூன்று இளைஞர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். தப்பிய இருவரை தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement