வாஷிங்டன்: அமெரிக்காவில் போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்த கறுப்பின இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் நாட்டையே கொந்தளிக்க வைத்துள்ளது.
அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் மெபிஸ் நகரில் கடந்த 07ம் தேதி அதிக வேகமாக கார் செல்வதை பார்த்த அங்கு ரோந்து போலீசார் காரை விரட்டிச்சென்று தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். காரில் டயர் நிக்கோலஸ் என்ற கறுப்பின இளைஞர் உள்பட 5 பேர் இருந்தனர். காரில் இருந்து டயர் நிக்கோலஸ் இறங்கியதும், போலீசார் அவரை மிகவும் கொடூரமாக தாக்கினர் இதில் அவர் மயங்கி விழுந்தார். இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது.
![]()
|
அவரை மருத்துவமனைகளில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 10-ம் தேதி இறந்தார். இத்தகவல் நாடு முழுவதும் தீயாய் பரவியதையடுத்து கறுப்பர் இனத்தவர்கள் கொந்தளித்தனர்.
நடந்த சம்பவத்திற்கு அதிபர் ஜோபைடன் கண்டனம் தெரிவித்ததுடன், தனக்கு வேதனை அளிப்பதாக கூறினார்.
முதல் சம்பவம்
இதே போன்று 2020ல் அமெரிக்காவின் மினியாபொலிசில், ஜார்ஜ் பிளாய்டு, 46, என்ற கறுப்பினத்தவர் ஒருவரை போலீஸ்காரர், சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து தரையில் சாய்த்து, அவருடைய கழுத்தில், தன் கால் முட்டியாமல் அந்த போலீஸ்காரர் நெருக்கியுள்ளார். இதில், மூச்சுவிட முடியாமல், பிளாய்டு, அதே இடத்தில் உயிரிழந்தார். இது சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலாக பரவியதுடன் நாடு முழுவதும் கறுப்பினத்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement