சமூக வலைதளங்கள் மீதான புகாரை விசாரிக்க தீர்ப்பாயம்

Updated : ஜன 29, 2023 | Added : ஜன 29, 2023 | |
Advertisement
புதுடில்லி,-சமூக வலைதளங்கள் தொடர்பாக, பயனாளர்களின் புகார்களை விசாரிக்க, அரசால் அமைக்கப்பட்டுள்ள குறைகேட்பு தீர்ப்பாய கமிட்டி, வரும் மார்ச் முதல் செயல்படத் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மீது, பயனாளர்கள் அளிக்கும் புகார்களை விசாரிப்பது தொடர்பாக, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up

புதுடில்லி,-சமூக வலைதளங்கள் தொடர்பாக, பயனாளர்களின் புகார்களை விசாரிக்க, அரசால் அமைக்கப்பட்டுள்ள குறைகேட்பு தீர்ப்பாய கமிட்டி, வரும் மார்ச் முதல் செயல்படத் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news


'பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மீது, பயனாளர்கள் அளிக்கும் புகார்களை விசாரிப்பது தொடர்பாக, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

சமூக வலைதளங்கள் உள்ளிட்ட இணைய நிறுவனங்களின் பயனாளர்கள் அளிக்கும் புகார்கள் மீது, போதிய நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை என்றும், ஏராளமான புகார்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என்றும் தொடர்ந்து செய்திகள் வெளியாகின.


latest tamil news


இதையடுத்து, இந்த நிறுவனங்களின் குறைதீர்ப்பு அதிகாரிகள் தெரிவிக்கும் முடிவுகளை எதிர்த்து, பயனாளர்கள் புகார் அளிக்க வசதியாக, அரசு சார்பில் குறைகேட்பு தீர்ப்பாயத்துக்காக மூன்று கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவை, வரும் மார்ச் முதல் செயல்படத் துவங்கும். பயனாளர்கள் அளிக்கும் புகார்கள் தொடர்பாக, 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். இந்த கமிட்டி முழுக்க முழுக்க 'ஆன்லைன்' வாயிலாகவே செயல்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X