பந்தலூர்:நீலகிரி மாவட்டம், பந்தலுார் வனப்பகுதிகளிலும், வனம் ஒட்டிய தோட்டங்களிலும், வலசை வரும் பறவைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சுமத்திரா மற்றும் சாவகம் தீவுகளில் அதிகம் காணப்படும், 'காம்போ பாசிடே' பறவை குடும்பத்தை சேர்ந்த 'சுன்டா பூச்சிட்டு', மரங்களில் காணப்படும் பூச்சிகளை லாபமாக பிடித்து தின்னும் 'ஹிமாலயன் பிளாக் லோரேடு டிட்', தெற்கு சீனா, கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் அதிகளவில் காணப்படும் 'பச்சைக் காது பார் டெட்', தெற்காசிய வெப்பமண்டல பகுதிகளில் அளவில் காணப்படும் 'மாம்பழ சிட்டு' உட்பட பல பறவைகள், பந்தலுார் பகுதிகளில் காணப்படுகின்றன. பழ மரங்களில் முகாமிடும் இப்பறவைகள், 'ருசி' பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
Advertisement