வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
புதுடில்லி-பார்லிமென்டில் விவாதிக்க வேண்டிய பொருட்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க உரிய வழிமுறைகள் உருவாக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
![]()
|
புதுடில்லியைச் சேர்ந்த கரண் கர்க் என்பவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
பார்லி., பிரதிநிதிகளை மக்கள் ஓட்டளித்து தேர்வு செய்கின்றனர். இதன்பின், எம்.பி.,யுடன் மக்களுக்கு எந்தத் தொடர்பும் இருப்பதில்லை. பார்லிமென்டில் தங்களுடைய பிரச்னைகள் விவாதிக்கப்படுவதை தெரிவிக்கும் அதிகாரம் மக்களுக்கு வழங்க வேண்டும்.
![]()
|
இந்தந்த பொருட்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்பதை மக்கள் தெரிவிப்பதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். இதற்கான நடைமுறைகளை உருவாக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை, நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி. நாகரத்தினா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு ஏற்றுள்ளது. வழக்கின் விசாரணை அடுத்த மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Advertisement