ஊட்டி:ஊட்டி அருகே தாரநாடு மந்தை சேர்ந்த தோடரின மக்களின் பாரம்பரிய கோவில், சோலுார் அருகே ஓல்கோடு மந்தில் அமைந்துள்ளது. கோவில், 10 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. 2012ல் கோவில் புதுப்பிக்கப்பட்ட நிலையில், பராமரிப்பு பணி ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வந்தது.
இதற்காக, 30 நாட்கள் விரதம் இருந்த தோடரின் ஆண்கள், அப்பர்பவானி, மசினகுடி பகுதிக்கு சென்று 'ஆவுல்' என்ற புற்களையும், மூங்கில் பெரம்பு போன்றவற்றை எடுத்து வந்து, கோவிலின் கூரையை மாற்றி புதுப்பித்தனர்.
பணிகள் முடிந்த நிலையில், 'பொள்சி' என்றழைக்கப்படும் திருவிழா நேற்று நடந்தது. தோடரின ஆண்கள், தங்களது பாரம்பரிய உடையணிந்து வந்து பிறை வடிவிலான கோவிலின் முன் மண்டியிட்டு வணங்கினர். தொடர்ந்து, பாரம்பரிய நடனத்தை, மூத்த தோடரின ஆண்கள் ஆடி மகிழ்ந்தனர்.
Advertisement