சனாதன தர்மமே நம் நாட்டின் தேசிய தர்மமாகும். தன்னலத்தை கைவிட்டால், தேசிய தர்மத்தில் நாம் இணைவோம். தேசிய தர்மத்தில் நாம் இணையும்போது நாடு பாதுகாப்புடன் இருக்கும்.
யோகி ஆதித்யநாத், உத்தர பிரதேச முதல்வர், பா.ஜ.,
உரிய வயதில் திருமணம்!
இளம் வயதிலேயே திருமணம் செய்வது குறித்து பேசப்படுகிறது. அது போல, உரிய வயதில் திருமணம் செய்து, குழந்தைகளை பெற்றுக் கொள்வதும் முக்கியம். இது, பெண்களின் உடல் நலனைச் சார்ந்தது.
ஹிமந்த பிஸ்வ சர்மா, அசாம் முதல்வர், பா.ஜ.,
உண்மை என்ன?
பங்குச் சந்தை மோசடி உள்ளிட்ட நிதி மோசடிகளில் அதானி குழுமம் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான உண்மை நிலவரத்தை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.
மாயாவதி, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர், பகுஜன் சமாஜ்
Advertisement