காஞ்சிபுரம், ஆந்திர மாநிலம் பலமநேரி, புங்கனுார், மதனபள்ளி, கர்நாடக மாநிலத்தில் தாவணிகரை மற்றும் தமிழகத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர் மாவட்டங்களில் விளையும் தக்காளி காஞ்சிபுரம் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
பொங்கல் பண்டிகைக்குப்பின் வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததால், காஞ்சிபுரத்தில், கடந்த வாரத்தில் கிலோ தக்காளி, 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
பொங்கல் பண்டிகையை கொண்டாட விவசாய கூலித்தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றதால், ஆந்திர மாநிலத்தில் இருந்து தக்காளி வரத்து வெகுவாக குறைந்து விட்டது. இதனால், காஞ்சிபுரத்தில் தக்காளி விலை தற்காலிகமாக உயர்ந்தது.
சொந்த ஊருக்கு சென்ற விவசாய தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பியதால், தக்காளி வரத்து அதிகரித்துள்ளதை தொடர்ந்து, விலை பாதியாக குறைந்துள்ளது. இதனால், காஞ்சிபுரத்தில் கிலோ தக்காளி 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.