ஸ்ரீபெரும்புதுார், பாதாள சாக்கடை திட்ட பணிக்கு சாலை அடைக்கப்பட்டுள்ளதால் ஸ்ரீபெரும்புதுார் உள்ளே அரசு பேருந்துகள் வருவதை தவிர்த்து நெடுஞ்சாலையிலேயே செல்வதால் பயணியர் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில் 2013ம் ஆண்டு 77.11 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவங்கப்பட்டன. 2023ம் ஆண்டு துவங்கிய நிலையில் இதுவரை இந்த திட்ட பணிகள் நிறையடையவில்லை.
பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணியால் ஸ்ரீபெரும்புதுாரில் பல தெருக்கள் குண்டும், குழிமாக உள்ளன.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையம் செல்லும் முக்கிய சாலையான பெங்களூர் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்ட நான்கு இடத்தில் பள்ளம் தோண்டி பணிகள் நடந்து வருகின்றன.
இதனால், பெங்களூரு மெயின் ரோட்டில் இருவழிசாலை ஒரு வழியாக மாறியுள்ளதால் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நேற்று தேசிய நெடுஞ்சாலை வழியே ஸ்ரீபெரும்புதுார் உள்ளே வாகனங்கள் வருவதை தடுப்பு வைத்து அடைக்கப்பட்டுள்ளன.
இதனால், அரசு பேருந்துகள் ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையம் உள்ளே வரமுடியாததால் நெடுஞ்சாயிலேயே பயணிகளை இறக்கி நேரடியாக பூந்தமல்லியில் இருந்து காஞ்சிபுரம் செல்கிறது. இதனால், பயணியர் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஸ்ரீபெரும்புதுாரில் மந்த கதியில் நடக்கும் பாதாளசாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.
Advertisement