வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
பணஜி,-'கோவாவில் சுற்றுலா பயணியரின் அனுமதியின்றி, அவர்களுடன் 'செல்பி' அல்லது புகைப்படங்கள் எடுக்க வேண்டாம்' என, அந்த மாநில அரசு அறிவுறுத்திஉள்ளது.
![]()
|
சர்வதேச சுற்றுலா தலமான கோவாவிற்கு, ஆண்டுதோறும் நம் நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இவர்களின் தனி உரிமையைப் பாதுகாக்கவும், இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பல்வேறு அறிவுறுத்தல்களை அம்மாநில அரசு வெளியிட்டுஉள்ளது.
![]()
|
அதன் விபரம்:
சக சுற்றுலா பயணியரின் அனுமதியின்றி அவர்களுடன் செல்பி, புகைப்படம் எடுக்க வேண்டாம். குறிப்பாக, வெளிநாட்டு பயணியர் சூரிய குளியல், கடல் நீச்சல் ஆகியவற்றில் ஈடுபடும் தருணங்களில், அவர்களின் தனி உரிமையை பாதிக்கும் வகையில் புகைப்படங்கள் எடுக்க வேண்டாம்.
செங்குத்தான பாறைகள் மற்றும் கடல் பாறைகள் போன்ற ஆபத்தான இடங்களிலும், செல்பி எடுக்க தடை விதிக்கப்படுகிறது.
கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் மது அருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகும். திறந்தவெளியில் உணவு சமைக்கக் கூடாது. மீறுபவர்களின் சமையல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement