காஞ்சிபுரம், காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கேட் பகுதி பேருந்து நிறுத்தத்தில், பயணியரின் வசதிக்காக, 10 ஆண்டுகளுக்கு முன், இருக்கை வசதி இல்லாமல் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது.
பிள்ளையார்பாளையம், சாலபோகம் பகுதி மக்கள் பயணியர் நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.
இருப்பினும், பயணியர் நிழற்குடையில் இருக்கை வசதி இல்லாததால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர், நின்றபடியே காத்திருக்க வேண்டியுள்ளது.
இதனால், ரத்த அழுத்தம், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணியர், முதியோர், கால் வலி, உடல்நலம் குன்றியவர்கள் நிற்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மழைகாலத்தில், பயணியர் நிழற்குடை ஒழுகுவதால், நிழற்குடையை இடித்து அகற்றி புதிதாக நவீன நிழற்குடை அமைக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement