காலிம்போங்,- மேற்கு வங்கத்தில் திருமணத்தில் பங்கேற்க சென்றவர்களின் கார் ஆற்று பாலத்திலிருந்து கீழே விழுந்த விபத்தில்g, நான்கு பேர் பலியாகினர்; பலர் படுகாயமடைந்தனர்.
மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள பனாஹாட்டில் நடந்த திருமணம் ஒன்றில் பங்கேற்க ஒன்பது பேர் காரில் சென்றனர். நேற்று நள்ளிரவு 1:00 மணிக்கு, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ருங் டங் ஆற்றுப் பாலத்தில் வேகமாக சென்ற கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவரில் மோதி ஆற்றின் கரையில் கவிழ்ந்தது.
இதில், இருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயம் அடைந்த மற்ற ஏழு பேரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சிலிகுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Advertisement