காஞ்சிபுரம், தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெரிய காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, இந்திய மருத்துவ சங்க காஞ்சிபுரம் கிளையின் தலைவர் டாக்டர் மனோகரன் தலைமை வகித்தார்.
இதில், டாக்டர் அங்கம்மாள், வளர் இளம் பருவம் என்ற தலைப்பிலும், டாக்டர் மரியா பெண் குழந்தைகள் மன நலம் என்ற தலைப்பிலும் விளக்கவுரையாற்றினர்.
மருத்துவ சங்க மாநில துணை தலைவர் டாக்டர் சரவணன், காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க பெண் மருத்துவர்கள் பிரிவின் தலைவர் டாக்டர் நிஷாப்ரியா வரவேற்றார்.
முன்னாள் தலைவர் புஷ்பா முன்னிலை வகித்தார். இதில், ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவியர் மற்றும் ஆசிரியைகள் பங்கேற்றனர்.
Advertisement