காஞ்சிபுரம், காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் குடித்து விட்டு தாயை அடித்த மகனை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கச்சபேஸ்வரர் நகர் பகுதியை சேர்ந்தவர் வேலு, 60. இவரது மனைவி ரமணி, 57.
நேற்று முன்தினம் இரவு துாங்கி கொண்டிருந்தவர்களை அவர்கள் மகன் கார்த்திக், 30, குடித்து விட்டு தகராறு செய்து அடித்துள்ளார்.
இதில் ரமணிக்கு காயம் ஏற்பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து வேலு நேற்று சிவ காஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கார்த்திக்கை போலீசார் கைது செய்து காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.
போதையில் தகராறு: 3 பேர் கைது
பெரிய காஞ்சிபுரம் தர்கா பகுதியில் நேற்று குடிபோதையில் இருந்த மூவர் ஒருவருக்கு ஒருவர் அடித்து கொண்டனர்.
இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த கார்த்தி, 28. யாசர், 22 அவரது 17 வயதுள்ள தம்பி ஆகிய மூவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அண்ணன், தம்பி இருவரும் கார்த்தியை சரமாரியாக அடித்துள்ளனர்.
மூவரும் கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
Advertisement