உத்திரமேரூர்,துாய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில், மாதந்தோறும் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில், நீர்நிலைகள் பராமரித்தல் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி, உத்திரமேரூர் பேரூராட்சியில், நீர்நிலைகள் மற்றும் மழை நீர் வடிகால்வாய் சுத்தம் செய்தல், பிளாஸ்டிக் பயன்படுத்துதலை தவிர்த்தல், தூய்மை மற்றும் சுகாதாரம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
நேற்று உத்திரமேரூர் பேரூராட்சி துாய்மை பணியாளர்கள், மாதிரியம்மன் கோவில் குளம், நல்ல தண்ணீர் குளக்கரை உள்ளிட்ட பகுதிகளில், துாய்மை பணிகள் மேற்கொண்டதோடு மரக் கன்றுகள் நடவு செய்தனர்.
அப்போது, நகரை துாய்மையாக பாதுகாக்க உறுதுணையாக இருப்பதாக அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
Advertisement