வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
புதுடில்லி அரசியல் வட்டாரங்களில் ஒரு கடிதம் குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது. இதை எழுதியவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இவர், இதை அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் எழுதியுள்ளாராம்.
![]()
|
இந்தக் கடிதத்தில், மம்தா காங்கிரசை கண்டபடி திட்டியுள்ளார். 'ராகுல் ஒற்றுமை யாத்திரையை துவக்குவதற்கு முன்பாக எங்களை கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அமைக்கும் கூட்டணியை காங்கிரஸ் தான் முறியடிக்கிறது; இதன் வாயிலாக அக்கட்சி, மோடிக்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கிறது. நாங்கள் எந்த சமயத்திலும் ராகுல் தலைமையை ஏற்க மாட்டோம்' என, மம்தா இதில் அதிரடியாக எழுதியுள்ளாராம்.
![]()
|
இதோடு நிற்காமல், 'ராகுல் வெறும் ஜூனியர். என்னை பொறுத்தவரை, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார்தான் எதிர்க்கட்சிகளின் தலைவர்' எனவும், தன் மூன்று பக்க கடிதத்தில் மம்தா எழுதியுள்ளாராம்.
'வரும் 2024 லோக்சபா தேர்தலில் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்' என சில தலைவர்கள் சொல்லி வரும் நிலையில், மம்தாவின் கடிதம், இந்த ஒற்றுமைக்கு வேட்டு வைத்துள்ளது.
Advertisement