திருப்போரூர், திருப்போரூர் அருகே, செம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். 36; இவர் நேற்று, மாலை 3:00 மணியளவில், திருப்போரூர்- - செங்கல்பட்டு சாலையில் 'ஹோண்டா' பைக்கில், செம்பாக்கத்திலிருந்து, திருப்போரூரை நோக்கி சென்றார்.
அப்போது, செம்பாக்கம் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் வலது புறம் சாலை குறுக்கே கடக்கும்போது, எதிர் திசையில் செங்கல்பட்டு நோக்கி சென்ற 'ஹூண்டாய் கிரிட்டா' கார், பைக் மீது மோதியது.
விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
திருப்போரூர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.