வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சமீபத்தில் பா.ஜ.,வின் தேசிய செயற்குழு கூட்டம் புதுடில்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சில சீனியர் தலைவர்கள், பிரதமர் மோடி ஏன் கவலையுடன் காணப் படுகிறார் என, கேள்வி எழுப்பியுள்ளனர்.
![]()
|
இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் சொன்னாராம். 'உலகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு, நம் நாட்டில் கொரோனா தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. சமூக நீதிக்கான திட்டங்கள், பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் என, பலவற்றை மோடி செய்து வருகிறார்.
'இருந்தும், சிலர் அவரை தேவையில்லாமல் குறை கூறி வருகின்றனர். இதன் பின்னணியில் வெளிநாட்டு சதித் திட்டம் உள்ளது. வரும் லோக்சபா தேர்தலில் மோடி வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆகக் கூடாது என, எட்டு வெளிநாட்டு அதிபர்கள் திட்டம் தீட்டியுள்ளனர்' என அமித் ஷா சொன்னதும், அனைவரும் அதிர்ந்து போயினர்.
![]()
|
நம் நாட்டில் மோடிக்கு எதிராக செயல்படும் சில சக்திகளுக்கு, இந்த வெளிநாட்டு அதிபர்கள் கோடிக்கணக்கில் பணம் தருகின்றனராம். இதை வைத்து மோடிக்கு எதிராக செய்திகள் வெளியிடப்படுகின்றன. வெளிநாட்டு அதிபர்களின் இந்த திட்டத்தை, பிரதமர் மோடி தன்னிடம் தகுந்த ஆதாரங்களுடன் காட்டியதாக அமித் ஷா தெரிவித்தாராம். இதனால் தான் பிரதமர் மோடி கவலையுடன் காணப்பட்டார் எனவும் சொல்லியுள்ளார் அமித் ஷா.
வரும் 2024 லோக்சபா தேர்தலில் இந்த விஷயத்தை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்த, பா.ஜ., முடிவு செய்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை என்கின்றனர் சீனியர் தலைவர்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement