சென்னை-வட சென்னை மற்றும் துாத்துக்குடி அனல் மின் நிலையங்களில், 31 கோடி கிலோ நிலக்கரி மாயமான விவகாரம் குறித்து விசாரணை முடிந்தும், மின் வாரி யம் நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்கிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில், மின் வாரியத்திற்கு தலா, 210 மெகா வாட் திறனில், மூன்று அலகுகள் உடைய, வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. துாத்துக்குடியில் தலா 210 மெகா வாட் திறனில், ஐந்து அலகுகள் உடைய, அனல் மின் நிலையம் உள்ளது.
கடந்த 2021ல், வட சென்னை மின் நிலையத்தின் பதிவேட்டில் உள்ள நிலக்கரி அளவுக்கும், அங்கு இருப்பில் உள்ள நிலக்கரிக்கும், 23.80 கோடி கிலோ குறைவாக இருந்தது.
மேலும், துாத்துக்குடி அனல் மின் நிலையத்தில்பதிவேட்டில் உள்ள அளவை விட, இருப்பில் உள்ள நிலக்கரி, 7.20 கோடி குறைவாக இருந்தது. இதை, மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் வாரிய உயரதிகாரிகள் ஆய்வு செய்து, உறுதி செய்தனர்.
மாயமான நிலக்கரியின்மதிப்பு, 100 கோடி ரூபாய். இதுதொடர்பாக விசாரணை நடத்த, மின் வாரிய இயக்குனர்கள் அடங்கிய தனிக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு கள ஆய்வு செய்து, நிலக்கரி மாயமான விவகாரத்தை உறுதி செய்து, அறிக்கை சமர்ப்பித்தது.
![]()
|
இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விஜிலென்ஸ் பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. நிலக்கரி மாயமானதற்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படஇருப்பதாக, மின் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நிலக்கரி மாயமானது உறுதி செய்யப்பட்டு, ஒன்றரை ஆண்டு ஆகிறது. இருப்பினும் இதுவரை அதற்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், மின் வாரியம் தாமதம் செய்து வருகிறது.
இது குறித்து, மின் ஊழியர்கள் கூறுகையில்,'யாரை காப்பாற்ற, நடவடிக்கை எடுக்காமல் தாமதிக்கின்றனர் எனத் தெரியவில்லை. சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், இழப்பு ஏற்படுத்திய தொகையை அவர்களிடம் வசூலிக்க வேண்டும்' என்றனர்.