அனைத்து ரேஷன் கடைகளிலும் அங்கீகார சான்று வழங்க உத்தரவு

Updated : ஜன 29, 2023 | Added : ஜன 29, 2023 | |
Advertisement
சென்னை,- முதியோர், வேறு நபர்களை அனுப்பி, உணவுப் பொருட்களை வாங்குவதற்கான அங்கீகார சான்று படிவம், அனைத்து ரேஷன் கடைகளிலும் கிடைப்பதை உறுதி செய்யுமாறு, உணவு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.தமிழக ரேஷன் கடைகளில் முறைகேட்டை தடுக்க, கார்டில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்களின் விரல் ரேகையை பதிவு செய்து, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.முதியோர்,
முதியோர், உணவுப் பொருள், அங்கீகார சான்று,  படிவம், ரேஷன் கடை,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை,- முதியோர், வேறு நபர்களை அனுப்பி, உணவுப் பொருட்களை வாங்குவதற்கான அங்கீகார சான்று படிவம், அனைத்து ரேஷன் கடைகளிலும் கிடைப்பதை உறுதி செய்யுமாறு, உணவு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.


தமிழக ரேஷன் கடைகளில் முறைகேட்டை தடுக்க, கார்டில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்களின் விரல் ரேகையை பதிவு செய்து, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.


முதியோர், மாற்றுத்திறனாளிகள் கடைக்கு வர சிரமப்படுகின்றனர். அவர்கள் மட்டும் தங்களின் சார்பில் வேறு நபர்களை அனுப்பி பொருட்கள் வாங்கலாம்.



latest tamil news

இதற்கு, உணவு வழங்கல் துறை வழங்கும் அங்கீகார சான்று விண்ணப்ப படிவத்தில் கார்டுதாரர் பெயர், நியமிக்கும் நபர் உள்ளிட்ட விபரங்களை பூர்த்தி செய்து, ரேஷன் ஊழியர்களிடம் வழங்க வேண்டும்.


இந்த படிவத்தை உணவு வழங்கல் அலுவலகங்கள், ரேஷன் கடைகளில் வாங்கலாம். இது தவிர, www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விபரம் பலருக்கு, குறிப்பாக கிராமங்களில் வசிக்கும் நபர்களுக்கு தெரிவதில்லை.


ரேஷன் பொருட்கள் தகுதியான அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய, மாநில உணவு ஆணையம் செயல்படுகிறது.


ரேஷன் கடைகளில் படிவம் வழங்க, ஊழியர்கள் மறுப்பதாகவும், அதனால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் நேரில் செல்ல வேண்டி இருப்பதாகவும், உணவு ஆணையத்திற்கு புகார்கள் சென்றுள்ளன.


இது குறித்து, ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:


ஒரு ரேஷன் கார்டில், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் இருந்து, இளம் வயதினர் இல்லாதபட்சத்தில், வேறு நபரை அனுப்பி ரேஷன் பொருட்களை வாங்கலாம். இது, மாற்றுத்திறனாளிக்கும் பொருந்தும்.


இதற்கான அங்கீகார சான்று ரேஷன் கடையில் கிடைப்பதில்லை என்று புகார்கள் வந்துஉள்ளன. எனவே, அனைத்து ரேஷன் கடைகளிலும் எளிதில் படிவம் கிடைக்க வழிவகை செய்யுமாறு, உணவுத் துறையிடம் அறிவுறுத்தப்பட்டது.


மேலும், கார்டுதாரர்களின் விரல் ரேகையை பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டால் திருப்பி அனுப்பாமல், மாற்று ஏற்பாட்டில் பொருட்களை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X