லாகூர் : டாலருக்கு நிகரான பாகிஸ்தான் பணம் வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது.
பாகிஸ்தானில் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அரசின் இலவச கோதுமை பெற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது. எரிபொருள் பற்றாக்குறையால் வாகன இயக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நெருக்கடியை சமாளிக்க அரபு நாடுகள் உலக வங்கி, ஐ.எம்.எப்., உள்பட பல இடுங்களில் கடன் பெற அரசு முயன்று வருகிறது.
நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு முற்றிலும் குறைந்துள்ள நிலையால் அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு டாலர் 262.6 ரூபாயாக பெரும் உயர்வில் உளளது. ஏற்கனவே தடுமாறி வரும் பாகிஸ்தான் பொருளாதாரம் இதனால் மேலும் பலவீனமாகி வருகிறது.