கருவேல மரம் அகற்றம்: ஐகோர்ட் எச்சரிக்கை

Updated : ஜன 29, 2023 | Added : ஜன 29, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை,-'சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது குறித்து பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால், அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்து உள்ளது. தமிழகம் முழுதும், சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ உள்ளிட்டோர் தொடர்ந்த மனுக்கள், நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphoneசென்னை,-'சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது குறித்து பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால், அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்து உள்ளது.latest tamil news


தமிழகம் முழுதும், சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ உள்ளிட்டோர் தொடர்ந்த மனுக்கள், நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில், மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதில், சில சிக்கல்கள் உள்ளன. அரசு சாரா அமைப்புகள் முன்வரவில்லை; பல இடங்களில் இயந்திரங்களை எடுத்து செல்வதில் சிரமம் உள்ளது; பருவ மழை காரணமாகவும், இடையூறு ஏற்பட்டுள்ளது' என்றார்.


latest tamil news


இதையடுத்து, 'சீமைக் கருவேல மரங்களால் ஏற்படும் பாதிப்பு கருதி, குறிப்பிட்ட அவகாசத்துக்குள் அகற்றும்படி, பஞ்சாயத்துக்கு உத்தரவிடலாம்' என, நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

விசாரணையை, பிப்ரவரி 14க்கு தள்ளி வைத்த நீதிபதிகள், சீமைக் கருவேல மரங்களை அகற்றியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, அரசுக்கு உத்தரவிட்டனர். இல்லையென்றால், அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

Ramesh - Chennai,இந்தியா
29-ஜன-202309:49:52 IST Report Abuse
Ramesh நானும் ரவுடி தான். நானும் ரவுடி தான். நீதிமான்களே உங்களுக்கு உண்மையில் இதில்
Rate this:
Cancel
Bala - Chennai,இந்தியா
29-ஜன-202308:55:11 IST Report Abuse
Bala நீ தான் கேனையன். கருவேல மரம் நல்லது. சீமை கருவேல மரம் கெடுதல்
Rate this:
Cancel
29-ஜன-202306:48:55 IST Report Abuse
அப்புசாமி முன்னாடி கருவேல மரங்களை அகற்றுகிறோம்னு சில அமைப்புகள் முன் வந்த போது இதே கோர்ட்டாருங்க வரிஞ்சி கட்டிக்கிட்டு வந்து தடை போட்டாங்க. இப்போ கருவேல மரங்கள் கெடுதல்னு புதுசா கண்டுபிடிச்சு உடனடியா அகற்றச் சொல்லுறாங்க. முன்னாடி கெடுதல்னு சொன்னவன் கேனையனா?
Rate this:
Dharmavaan - Chennai,இந்தியா
29-ஜன-202307:38:29 IST Report Abuse
Dharmavaanஅந்தந்த ஊர்களில் அவர்களே அகற்றி கொள்ள அனுமதி கொடுக்க வேண்டும். கோர்ட்டுக்கு நடைமுறை அறிவு வேண்டும் ஒட்டு வங்கியை நோக்கமாக கொண்ட அரசு இத்தி செய்யாது. கமிஷன் வேண்டும்...
Rate this:
ஆக .. - Chennai ,இந்தியா
29-ஜன-202308:26:00 IST Report Abuse
ஆக ..அவங்க உங்க ரகம் தானே .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X