வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சமீபத்தில் புதுடில்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றனர். இதில், தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபுவும் பங்கேற்றார்.
![]()
|
மோடியும், அமித் ஷாவும், சைலேந்திர பாபுவுடன் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பக்கத்தில் யாரும் இல்லை. இந்த சில நிமிட பேச்சு தனியாக நடந்ததாம். இது, புதுடில்லி அரசியல் வட்டாரங்களை பரபரப்பில் ஆழ்த்தியதோடு, பல சர்ச்சைகளையும் எழுப்பியுள்ளது.
![]()
|
'தமிழக கவர்னர் ரவி குறித்து ஏதாவது பேசினரா, தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதா, தி.மு.க.,வைப் பற்றி எதுவும் கேட்டனரா' என, டில்லி அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. கவர்னர் பற்றி சைலேந்திரபாபுவிடம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு வேளை தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு டி.ஜி.பி., வாயிலாக ஏதாவது சேதி அனுப்பப்படுகிறதா எனவும் சந்தேகம் எழுந்துள்ளது. அவர்கள் என்ன பேசினர் என்பது அந்த மூவருக்கு மட்டுமே வெளிச்சம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement