உணவு என்பது உடலின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேவைக்கேற்ப சமைத்துச் சாப்பிட்ட காலம் போய் தற்போது ஒருமுறை சமைத்து விட்டு, அதைப் பலமுறை சூடு செய்து சாப்பிடும் வழக்கத்திற்குப் பலர் மாறியுள்ளோம். இதற்கு உறுதுணையாக பிரிட்ஜ் மற்றும் மைக்ரோவேவ் ஓவன் உள்ளன.
உணவைச் சூடு செய்து சாப்பிட்டால் நோய்த் தொற்று ஏற்படாது என்ற கண்ணோட்டத்தில் மீண்டும், மீண்டும் சூடு செய்து சாப்பிட்டுப் பழகி விட்டோம்.
இது ஆபத்து என்றும், மீண்டும் உணவுகளை சூடுபடுத்திச் சாப்பிட்டால் அதில் உள்ள சத்துக்கள் குறைந்து விடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். அப்படி மீண்டும் சமைத்துச் சாப்பிடக் கூடாத உணவுகள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.
முட்டை
![]()
|
முட்டை அதிகம் புரதச்சத்து நிறைந்த உணவாகும். சமைப்பதற்கும் எளிது என்பதால் நம்மில் பலர் அதிகம் விரும்புவது முட்டையைத் தான். இதை ஒருமுறை செய்தை மீண்டும் சூடு செய்து சாப்பிட்டால் செரிமான கோளாறு மற்றும் வயிறு கோளாறுகளை உண்டு பண்ணும். ஆகையால் முட்டையை மீண்டும் சமைத்துச் சாப்பிடக் கூடாது.
பீட்ரூட்
![]() Advertisement
|
இதில் அதிகம் நைட்ரேட் சத்து அதிகம் உள்ளது.ஆகையால் பீட்ரூட்டை ஒருமுறை சமைத்து மீண்டும் சூடு செய்து சாப்பிட்டால்,நைட்ரோசமைன்களாகவும் மாற்றப்படுகின்றன. இதனால் புற்றுநோயை உண்டாக்கும் அபாயம் அதிகம்.
கீரை
![]()
|
கீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் அதிகம் உள்ளது. இதனால் கீரையை ஒருமுறை சமைத்து மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிட்டால் இதிலிருக்கும் நைட்ரேட், நைட்ரைட்டாக மாறும். இது செரிமான பிரச்னை மற்றும் குடல் புற்றுநோய் உண்டாக வழிவகை செய்யும்.
சிக்கன்
![]()
|
முட்டை போலவே சிக்கனிலும் அதிகளவு புரதச்சத்து உள்ளது. இந்த உணவுகளை அதிகம் சாப்பிடும் செரிமானமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். மேலும் இதை சூடுபடுத்திச் சாப்பிடும் போது, அதன் சத்துகள் அதிகரித்து புட் பாய்சனாக வாய்ப்புள்ளது. ஆகையால் மறந்தும் மீண்டும் சூடு செய்து சாப்பிடக் கூடாத உணவுகளில் சிக்கனும் ஒன்றாகும்.
எண்ணெய்
![]()
|
ஒருமுறை சமையலுக்குப் பயன்படுத்திய எண்ணெயை எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் அதைச் சமையலுக்குப் பயன்படுத்தக் கூடாது. இதனால் அதன் அடர்த்தி அதிகரித்து, இதய நோய், உணவு குழாய் உபாதைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.