வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காபூல்: தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை, தலிபான் அரசு ஆட்சி செய்து வருகிறது. இங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பெண்களை நுழைவுத் தேர்வு எழுத அனுமதிக்கக் கூடாது என்று பல்கலைக்கழகங்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டத்திற்கான நுழைவுத் தேர்வில் பெண்கள் பங்கேற்க முடியாது. எந்தவொரு பல்கலைக்கழகமும் ஆணையை மீறினால், கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.