வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை ஏப்ரல் மாதம் திருச்செந்துாரிலிருந்து துவங்க உள்ளது. இதற்கான ஆயத்தங்கள், பா.ஜ., சீனியர் தலைவர் பி.எல். சந்தோஷ் தலைமையில் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இதற்கென சிறப்பு 'கன்ட்ரோல் ரூம்' புதுடில்லியில் பா.ஜ., தலைமை அலுவலகத்தில் தயாராகிவிட்டது. இந்த அறையில், அண்ணாமலை எந்த ஊர்களுக்கு செல்கிறார் என்கிற வரைபடமும் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெற உள்ள பாதயாத்திரைக்கு, புதுடில்லியில் ஏன் கண்ட்ரோல் ரூம் என, கேள்வி கேட்கின்றனர். இதற்கு காரணம் உள்ளதாம். தெலுங்கானா பா.ஜ., தலைவரும், எம்.பி.,யுமான சஞ்சய் பண்டி மற்றும் பா.ஜ.,வின் தேசிய செயலர் சுனில் தியோதர் ஆகியோர் சந்தோஷுடன் சேர்ந்து, அண்ணாமலையின் இந்த பாதயாத்திரையை கண்காணிக்க உள்ளனர்.
இப்படி வேறு வேறு மாநிலங்களில் உள்ள மூவர், பாதயாத்திரையை கண்காணிக்க உள்ளதால் கன்ட்ரோல் ரூம் புதுடில்லி பா.ஜ., அலுவலகத்தில் உள்ளது. அதோடு பா.ஜ., சீனியர் தலைவர்களும் அடிக்கடி கன்ட்ரோல் ரூமுக்கு வந்து என்ன நடக்கிறது என தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாம்.