உடலில் முகம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் தான் பாதமும். பாதங்களை முறையாக பராமரிக்கவில்லை என்றால், வீக்கம், வெடிப்பு போன்றவை ஏற்படும்.இப்படி வெடிப்புள்ள குதிகால்களை அகற்றி, உங்கள் பாதத்தை இளஞ்சிவப்பாகவும் மென்மையாகவும் மாற்ற, இந்த தோல் பராமரிப்பு குறிப்புகளை முயற்சிக்கவும்.
ஒரு டீஸ்பூன் பூந்திக்கொட்டை பவுடர், 200 மில்லி பால் மற்றும் ஒரு கைப்பிடி ரோஜா இதழ்களைச் சேர்த்து, ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரில் மேலே வைக்கவும். அதன் பின்னர் அந்த தண்ணீரில் கால்களை 15 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் சுத்தமான குளிர்ந்த தேங்காய் எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்யவும்.
இரண்டு டீஸ்பூன் திரிபலா பொடி, ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் ஒரு டீஸ்பூன் கடலை மாவு மற்றும் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து கலவையாகத் தயார் செய்து கொள்ளவும். பின்னர் இந்த கலவையைப் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 15 நிமிடம் கழித்துக் கழுவினால் பாதங்கள் மிருதுவாகும்.
ஒரு தேக்கரண்டி வடிகட்டிய காபி தூள், 2ஸ்பூன் பாதாம் எண்ணெய் /தேங்காய் எண்ணெய், 1/2ஸ்பூன் சர்க்கரை மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு எடுத்து ஒன்றாகக் கலந்து, உங்கள் கால்களில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் புளியை ஊறவைத்து, 1/2ஸ்பூன் வெல்லம் மற்றும் 2ஸ்பூன் தேங்காய் எண்ணெய் / பாதாம் எண்ணெய் மற்றும் 1ஸ்பூன் கல் உப்பு சேர்த்து கால்களில் தடவி மெதுவாகத் தேய்த்துக் கொடுக்க வேண்டும்.
இரண்டு டீஸ்பூன் ஆரஞ்சு தோல், ஒரு டீஸ்பூன் கடல் உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று நன்கு கலந்து, இந்த கலவையை உங்கள் கால்களில் மெதுவாகத் தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
உடலில் முகம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் தான் பாதமும். பாதங்களை முறையாக பராமரிக்கவில்லை என்றால், வீக்கம், வெடிப்பு போன்றவை ஏற்படும்.இப்படி வெடிப்புள்ள குதிகால்களை அகற்றி, உங்கள்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement