வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவனந்தப்புரம்: என்னை ஹிந்து என்று அழைக்க விரும்புகிறேன் என கேரள கவர்னர் ஆரிப் கான் கூறியுள்ளார்.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஹிந்து சமய மாநாட்டில் கலந்து கொண்டு, கேரள கவர்னர் ஆரிப் கான் கூறுகையில், என்னை ஹிந்து என்று அழைக்க விரும்புகிறேன். காலனித்துவ காலத்தில் ஹிந்து, முஸ்லீம் மற்றும் சீக்கியர் போன்ற சொற்களை பயன்படுத்துவது மிகவும் நன்றாக இருந்தது, ஏனென்றால் குடிமக்களின் சாதாரண உரிமைகளை கூட தீர்மானிக்க ஆங்கிலேயர்கள் சமூகங்களை அடிப்படையாக வைத்திருந்தனர்.

ஹிந்து என்பது மதத்தைக் குறிக்கும் பெயர் அல்ல, புவியியல் ரீதியாகவே அந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது. ஹிந்து என்பது இந்த நாட்டில் பிறந்தவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல். இந்தியாவில் பிறந்த அனைவரும் ஹிந்துக்கள். இந்தியாவில் விளைந்த உணவைச் சாப்பிட்டாலோ, இந்திய நதிகளில் இருந்து நீரைக் குடித்தாலோ எவரும் ஹிந்து என்று அழைக்கத் தகுதியானவர். ஆங்கிலேயர்களின் அட்டூழியங்களைப் பற்றி ஏன் ஆவணப்படம் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.