உலகையே வியக்க வைக்கும் உத்திரமேரூர் கல்வெட்டு: பிரதமர் மோடி

Updated : ஜன 29, 2023 | Added : ஜன 29, 2023 | கருத்துகள் (26) | |
Advertisement
புதுடில்லி: தமிழகத்தின் உத்திரமேரூரில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு, உலகையே வியக்க வைக்கிறது. அது, மினி அரசியலமைப்பு போன்று உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று 'மன் கி பாத் ' நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு ரேடியோ மூலம் உரையாற்றி வருகிறார். பழங்குடியினர் ஆர்வம்இந்தாண்டின் முதல் 'மன் கி பாத்'
MannKiBaat, narendramodi, Uthiramerur, Inscription, pmmodi, மன்கிபாத், நரேந்திரமோடி, உத்திரமேரூர், கல்வெட்டு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: தமிழகத்தின் உத்திரமேரூரில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு, உலகையே வியக்க வைக்கிறது. அது, மினி அரசியலமைப்பு போன்று உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று 'மன் கி பாத் ' நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு ரேடியோ மூலம் உரையாற்றி வருகிறார்.பழங்குடியினர் ஆர்வம்

இந்தாண்டின் முதல் 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பழங்குடியினர் மற்றும் அந்த சமூகத்துடன் தொடர்புடையவர்களுக்கு குறிப்பிடத்தக்க அளவு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு உள்ளது. நகர வாழ்க்கையுடன் ஒப்பிடுகையில் பழங்குடியின வாழ்க்கை வித்தியாசமானது. அதற்கு என சவால்கள் உள்ளன. இதனையும் தாண்டி, தங்களது பாரம்பரியத்தை பாதுகாக்க பழங்குடியினர் ஆர்வமாக உள்ளனர்.


latest tamil newsவிருது

பழங்குடியினரின் மொழிகளான டோடோ, ஹோ, குய், குவி மற்றும் மண்டா ஆகியவை பற்றிய பணிகளில் ஈடுபட்ட பல பெரும் பிரபலங்கள் பத்ம விருது பெற்றுள்ளனர். அது நம் அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயம். சித்தி, ஜார்வா மற்றும் ஒன்ஜ் ஆகிய பழங்குடியினரை பற்றிய பணிகளில் ஈடுபட்டவர்கள் இந்த முறை பத்ம விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதேபோன்று நமது பாரம்பரிய இசைக்கருவிகளான சந்தூர், பாம்ஹம், துவிதாரா ஆகியவற்றின் மெல்லிசையை பரவ செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர்களும் இந்த முறை பத்ம விருது பெற்றுள்ளனர்.மக்கள் பங்கேற்பு

இந்தியா முன்மொழிந்ததை தொடர்ந்து, சர்வதேச யோகா தினம் மற்றும் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டை கொண்டாட ஐக்கிய நாடுகள் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நடக்கும் இரண்டு பிரசாரங்களிலும் மக்கள் பங்கேற்பதால், புரட்சி வரும். யோகாவையும், உடற்தகுதியையும் தங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மக்கள் ஏற்றுள்ளதால், இந்த பிரசாரத்தில் அதிகளவில் பங்கேற்றுள்ளனர். அதேபோல், சிறுதானியங்களையும் அதிக மக்கள் எடுத்து கொண்டு வருகின்றனர்.


latest tamil news


ஜனநாயகத்தின் தாய்

தமிழகத்தில் ஒரு சிறிய கிராமம், அனைவராலும் நன்கு அறியப்பட்ட கிராமம் உத்திரமேரூர். இங்கு ஏறக்குறைய நூற்றுகணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு உலகையே வியக்க வைக்கிறது. இந்தக் கல்வெட்டு ஒரு மினி- அரசியலமைப்பு போன்றது. இங்கு ஆயிரத்தி நூறு ஆண்டுகளுக்கு முந்தைய அரசியலமைப்பு குறித்து, கல்வெட்டு உள்ளது. கிராம சபையில் உள்ளதையும், கிராமசபை செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் மற்றும் அதன் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் செயல்முறை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் விரிவாக விளக்குகிறது.மக்கள் பரவசம்

கடந்த 6 முதல் 8 தேதி வரையில் பர்ப்பிள் பெஸ்ட் என்ற தலைப்பில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான திருவிழா நடந்தது. இதில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கோவாவின் பிரசித்தி பெற்ற மீராமர் பீச்சில் முழு அளவில் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும் என அறிந்து மக்கள் பரவசம் அடைந்து உள்ளனர்.மின்னணு கழிவுகள்

ஒவ்வொரு ஆண்டும் 5 கோடி டன் மின்னணு கழிவுகள் தூக்கி எறியப்படுகின்றன என ஐ.நா., ஆய்வு அறிக்கை கூறுகிறது. இந்த மின்னணு கழிவுகளில் இருந்து 17 வகையான விலை மதிப்பற்ற உலோகங்களை வெவ்வேறு நடைமுறைகளின் வழியே நாம் பிரித்து எடுக்க முடியும். ஒருவர் தனது பழைய கருவிகளை மாற்றும்போது அது முறையாக குப்பைக்கு கொண்டு செல்லப்படுகிறதா இல்லையா என்பது பற்றி கவனம் கொள்வது முக்கியம். மின்னணு கழிவுகள் முறையாக நீக்கப்படவில்லை எனில், அது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும். கவனமுடன் கையாளப்பட்டால், பொருளாதார மீட்சிக்கான மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாட்டிற்கான ஆற்றல் மிக்க சக்தியாக அது மாறும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (26)

M Ramachandran - Chennai,இந்தியா
31-ஜன-202319:43:29 IST Report Abuse
M  Ramachandran திருமங்கலம் பார்முலா என்பதும் உடன் நியாபாகம் வருவது அதிகாலை நடை பயிற்சி உயிர் ஆபத்தை விளைவிக்கும் என்பது தான்.
Rate this:
Cancel
30-ஜன-202311:32:08 IST Report Abuse
பாரதி அருமையான பேச்சு. நன்றிகள். வாழ்க.
Rate this:
Cancel
கனோஜ் ஆங்ரே - மும்பை,இந்தியா
29-ஜன-202318:06:10 IST Report Abuse
கனோஜ் ஆங்ரே அய்யா... பிரதமரே... 2003ல் தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறவிருந்த நிலையில்.... கலைஞர் தன் உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதினார். அதன் தலைப்பு. “உத்திரமேரூர் கல்வெட்டு உரைப்பது என்ன..?”...ன்னு. அதில் உத்திரமேரூர் கல்வெட்டு வரலாறு... தமிழ்க்குடி பேரரசனனான ராஜராஜசோழன், தனது ஆட்சிக் காலத்தில்.... கிராம பஞ்சாயத்து தலைவரை... “குடவோலை” முறை மூலம் தேர்ந்தெடுத்து பதவி அளித்தான். இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்களாட்சியின் மாண்பை போற்றியவன் தமிழன், தமிழ் அரசன். உலகத்திற்கே... ஜனநாயகத்தை கற்றுத்தந்ததோடு... அதை நடைமுறைப்படுத்தியவன் தமிழன்... என விளக்கமாக “உத்திரமேரூர் கல்வெட்டு உரைப்பது என்ன..?” என்ற அறிக்கை மூலம் வெளியிட்டார் கலைஞர். இதையெல்லாம் இப்ப சொன்னா... என்ன கிறுக்கனுப்பானுங்க, இப்பத்து ஆளுங்க....?
Rate this:
Dharmavaan - Chennai,இந்தியா
29-ஜன-202318:55:15 IST Report Abuse
Dharmavaanசினிமாவுக்கு வசனம் எழுதிவிட்டது போல் இருக்கு...
Rate this:
Viswam - Mumbai,இந்தியா
29-ஜன-202319:06:24 IST Report Abuse
Viswamஉத்திரமேரூர் கல்வெட்டுகள் பற்றியும் அன்றைய கால அரசியல் அமைப்பு பத்தியும் சுதந்திரத்துக்கு முன்னாலே வெவேறு ஜாம்பவான்கள் எழுதியுள்ளார்கள். நமக்குத்தான் ஆரிய வந்தேறி தியரி முக்கியமாச்சே , ஆகையால் சரித்திர விஷயங்கள் எதையும் தேடி படிக்கிறது கிடையாது. இப்ப முழு இந்தியாவுக்கும் காதுகொடுத்து கேட்கும் ரேடியோ ப்ரோக்ராமில் எல்லோருக்கும் தெரியமாதிரி பிரதமர் உத்திரமேரூர் கல்வெட்டு பத்தி சொன்னாக்க பெருமிதம் கொள்ளவேண்டும்....
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
29-ஜன-202320:32:42 IST Report Abuse
Kasimani Baskaranபெரியார் கூட இதைத்தான் சொன்னார். ஆங்... தீம்கா ஜனநாயகம் என்பது திருமங்கலம் பார்முலாவிலிருந்து உதயமானது... படிப்பது இராமாயணம் - இடிப்பது பெருமாள் கோவிலாம்... அதுபோலத்தான்......
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
30-ஜன-202305:09:12 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அன்னிக்கி பாஜாக்கா இருந்திருந்தால் குடத்துக்கு கீழே ஓட்டையை போட்டு ஆட்டையை கலைச்சிருப்பானுங்க. பின்வாசலை அன்னிக்கே கண்டுபிடிச்சிருப்பாய்ங்க .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X