மாலைநேரத்தில் டீயுடன் கூடிய பக்கோடா எப்போதுமே தனி ஸ்பெஷல் தான். அதேபோல் இந்த பிரட் பக்கோடாவும் உங்களைக் கவர்ந்து இழுக்கும்.
தேவையான பொருட்கள்
பிரட் துண்டுகள் - 4
வெங்காயம் - 1 பெரியது
கொத்தமல்லி
கறிவேப்பிலை
பச்சை மிளகாய் -2
கடலை மாவு - 50 கிராம்
மிளகாய்த்தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1/2 லிட்டர்
செய்முறை
முதலில் பிரட் துண்டுகளைத் தண்ணீரில் நனைத்து நன்றாக உதிர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மிக்ஸிங் பவுலில் பிரட் தூளுடன், நீளவாக்கில் வெட்டிய வெங்காயத்தைச் சேர்க்க வேண்டும்.
பிறகு அதனுடன் கொத்தமல்லி, கருவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும்.
அடுத்து மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ள வேண்டும். அதன்பின் கொஞ்சம், கொஞ்சமாகக் கடலை மாவைச் சேர்த்து பக்கோடா பதத்திற்கு மாவைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன் பக்கோடாவை போட்டு பொன்னிறமாக மாறிய பிறகு எடுத்தால் சுவையான பிரட் பக்கோடா தயார்.
இதைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். மாலை நேரத்தில் டீயுடன் வீட்டில் உள்ள பெரியவர்கள் மற்றும் விருந்தாளிகளுக்குப் பரிமாறலாம்.