வாஷிங்டன் : 2023ல் அதிக எண்ணிக்கையில் இந்தயர்களுக்கான விசாவுக்கு ஒப்புதல் அளிக்க அமெரிக்க தூதரகம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து, மும்பையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஜான் பல்லார்ட் கூறியதாவது: இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம், கடந்த ஆண்டில் 8 லட்சம் விசாவுக்கு ஒப்புதல் அளித்தது. இந்த ஆண்டில் இன்னும் அதிக விசாக்களுக்கு ஒப்புதல் அளிக்கதிட்டமிட்டுள்ளோம்.
அதேபோல், முதல் முறையாக பி1, பி2 சுற்றுலா மற்றும் தொழில்முறை பயண விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு காத்திருப்புக் காலம் குறைக்கப்படுகிறது. அதேபோல் விசா புதுபிக்க மக்கள் இனி மின்னஞ்சல் மூலமாக அனுப்பலாம். அமெரிக்காவுக்கு பயணம் செய்வதற்கான நடை முறையை எளிமைப்படுத்தும் நோக்கில் விசா காத்திருப்புக் காலத்தை குறைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளோம். சமீபத்தில் இந்தியாவில் 2.5 லட்சம் பேருக்கு பி1 மற்றும் பி2 விசாக்களை வழங்கினோம்.

2023ல் அதிக எண்ணிக்கையில் இந்தியர்களுக்கான விசாவுக்கு ஒப்புதல் அளிக்க அமெரிக்க தூதரகம் முடிவு செய்துள்ளது. இதற்காக கூடுதல் அதிகாரிகளை நியமித்தும், சனிக்கிழமைகளில் தூதரக அலுவலகங்களைத் திறந்தும், விசா ஒப்புதல்களை துரிதப்படுத்த திட்டம் செய்யப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பிப்பவர்களின் காத்திருப்புக் காலம் குறையும். இவ்வாறு ஜான் பல்லார்ட் கூறினார்.