சென்னை: தொண்டை போய் விட்டால் தொண்டு போய்விடும் என சென்னையில் நடந்த மருத்துவ மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னையில் மருத்துவ மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். பின் அவர் பேசியதாவது: மருத்துவ அறிவியல் மாநாடு தமிழில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. மருத்துவ நூல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தமிழை, தமிழே என்று சொல்லும் போது கிடைக்கும் சுகம் எங்கும் கிடைப்பதில்லை.
நிர்வாகத்தில் தமிழ், கோயில்களில் தமிழ், நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழ், இதனை வலியுறுத்தும் மற்றும் செயல்படுத்தும் அரசாக திமுக உள்ளது. தொண்டை போய் விட்டால் தொண்டு போய்விடும். இவ்வாறு அவர் பேசினார்.