மதுரை மாநகராட்சி நீச்சல்குளம் வளாகத்தில் 'நமக்கு நாமே திட்டத்தின்' கீழ் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த படிப்பக மையத்தை அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் திறந்து வைத்தனர்.
மேயர் இந்திராணி பொன்வசந்த், எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, வெங்கடேசன், துணைமேயர் நாகராஜன், கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங் பங்கேற்றனர். அரசு போட்டித் தேர்வுகளில் பங்கேற்போர் தங்களை தயார் செய்வதற்கு வசதியாக ரூ.45 லட்சம், எம்.பி., நிதி ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. மாநகராட்சி மண்டல தலைவர் சரவணபுவனேஸ்வரி, நகர் பொறியாளர் அரசு, செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன் கலந்து கொண்டனர்.