இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், கடந்தாண்டு துணிகர முதலீட்டாளர்கள் வெகுவாக முதலீட்டை குறைத்த போதும், இந்தாண்டு சில துறைகளில் ஆரம்ப கட்ட நிலையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் செயல்பாடு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தாண்டு பெரும்பாலான ஸ்டார்ட் அப்கள், அதிக பணம் ஈட்டும் அணுகுமுறையை பின்பற்றுவதால்,வருவாய் மற்றும் வளர்ச்சியை மையமாகக் கொண்டதாக இருக்கும்.
க்யூ.எஸ்.ஆர் (QSR) எனப்படும் விரைவு உணவு விடுதிகள், நேரடி வாடிக்கையாளர் சேவை (D2C) மற்றும் எலெக்ட்ரிக் வாகன சந்தை (EV) , கட்டுமான துறைகளில் உள்ள ஸ்டார்ட் அப்
நிறுவனங்களில் செயல்பாடுகள் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
சில கார்ப்பரேட் நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் ஆட்குறைப்பு காரணமாக, நல்ல நிதி வசதி கொண்ட ஸ்டார்ட் அப்கள், அறிவார்ந்த நபர்களை அணுகுவது அதிகரித்து வருகிறதென இந்தியாவின் முதல் வென்சர் நிதி நிறுவனமான 100எக்ஸ்.விசி தெரிவித்துள்ளது.
100 எக்ஸ்.விசி நிறுவனரான சஞ்சய் மேத்தா கூறுகையில், 'இந்தாண்டு இந்தியாவில் ஸ்டார்ட் அப்களில் எண்ணிக்கை, அதிகளவில் இருக்குமென எதிர்பார்க்கிறோம். முதலீட்டாளர்களை பொறுத்தவரை, குறிப்பிட்ட துறை நீங்கலாக மற்றவற்றில் முதலீடு அதிகளவில் இருக்குமென எதிர்ப்பார்க்கிறோம். ஸ்டார்ட் அப் உலகில் சரியான நிறுவனங்களை வடிகட்டி, தேர்வு செய்து இந்தாண்டு முதலீடு செய்வோர், 2030க்குள் தங்களது போர்ட்ஃபோலியோ ஒளிமயமானதாக மாறுவதை காணலாம்.' என்றார்.
தற்போது, இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், 2022ல் மிகப்பெரிய அளவுக்கு அதாவது, 35 சதவீதம் முதலீடு குறைந்துள்ளது. 2021ல் 37.2 பில்லியன் டாலர் முதலீடுகள் வந்த நிலையில், 2022ல் (நவ., வரை) 24.7 பில்லியன் டாலர்கள் மட்டுமே முதலீடு வந்தது. இருப்பினும், இந்தாண்டு துவக்கத்திலேயே, சில தொழில்கள் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தைக் கொண்டுள்ளன.
![]()
|
க்யூ.எஸ்.ஆர் எனப்படும் உணவு சார்ந்த வணிகம் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பத்தில் பெரும்பாலான துறைகளை விஞ்சுகிறது. இது சிறந்த முதலீட்டுடன், செலவுகளை திறமையாக கையாளுதல், நுகர்வோரின் வாங்கும் நடத்தை மற்றும் அடையாளம் காண கூடிய சந்தை என்பதால், வணிகத்தை குறைந்த ரிஸ்க் உள்ள தொழிலாகவும், லாபகரமானதாக மாற்றுகிறது.
![]()
|
இந்தியாவின் மின்னணு வர்த்தகம், 2026ம் ஆண்டளவில் 200 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிகரித்து வரும் இணைய பயன்பாடு ,ஸ்மார்ட்போன்களின் பெருக்கம் ஆகியவற்றால் முன்னெடுத்து செல்லப்படுகிறது பிராண்டுகள் ஆன்லைனில் நேரடியாக நுகர்வோரை சென்றடைந்து விற்பனை செய்வதற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பாகும். 2023ம் ஆண்டில், பல டிஜிட்டல் முதல் நேரடி நுகர்வோர் ஸ்டார்ட் அப்கள், எதிர்காலத்தில் பிரபலமான பெயருடன் போட்டியிடும்.
![]()
|
ஸ்டார்ட் அப்களுக்கான மின்சார வாகன சந்தை (EV) தொடர்ந்து வளர்ந்து வருகிறது. மேம்பட்ட பேட்டரி தொழில்நுட்பங்கள், சார்ஜிங் உள்கட்டமைப்பு, உதிரி பாகங்கள் மற்றும் சுய-ஓட்டுநர் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களில் ஸ்டார்ட்அப்கள் வேலை செய்கின்றன. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன சந்தையானது 2030ம் ஆண்டுக்குள் 10 மில்லியன் நேரடி வேலைகளையும், 50 மில்லியன் மறைமுக வேலைகளையும் இந்தத் துறையில் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement