வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள துணிக்கடையில் இரும்பு கேட் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி, 5 வயது சிறுமி பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
துணிக்கடையில் காவலாளியாக பணிபுரியும் தனது தந்தையை காண, தாயுடன் வந்தபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.