வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அம்ருத் உதான் என்று பெயர் சூட்டப்பட்ட ஜனாதிபதி மாளிகை பூந்தோட்டத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று(ஜன.,29) திறந்து வைத்தார்.
ஜனாதிபதி மாளிகையில், முகலாய மற்றும் பெர்சிய தோட்டங்களின் பாணியில் மூன்று தோட்டங்கள் உள்ளன. ஸ்ரீநகரில் உள்ள முகலாய தோட்டங்களால் கவரப்பட்ட பொதுமக்கள், இந்த தோட்டங்களில் ஒன்றை முகலாய தோட்டம் என அழைத்து வருகின்றனர். ஆனால், அது அதிகாரப்பூர்வ பெயர் கிடையாது.
முகலாயத் தோட்டத்தின் பெயர் மாற்றப்பட்டு, அமிர்த தோட்டம் என்ற அர்த்தத்தில், அம்ருத் உதான் என்ற பொதுவான பெயரை ஜனாதிபதி சூட்டினார். ஜனாதிபதி மாளிகையின் ஆன்மாவாகக் கருதப்படும் அம்ருத் உதான், 15 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.
இந்நிலையில், அம்ருத் உதான் என்று பெயர் சூட்டப்பட்ட ஜனாதிபதி மாளிகை பூந்தோட்டத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று(ஜன.,29) திறந்து வைத்தார். தோட்டம் வரும் ஜனவரி 31ம் தேதி பொது மக்களுக்காக திறக்கப்படும். மார்ச் 26ம் தேதி வரை திறந்திருக்கும்.