நாக்பூர்: நாக்பூரில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது பயணி ஒருவர் அவசர கதவை திறக்க முயற்சி செய்துள்ளார். இதையடுத்து தகவல் அறிந்த விமான ஊழியர் தடுத்து நிறுத்தினர். மேலும் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயற்சி செய்த பயணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து விமானத்தில் பாதுகாப்பு விசயத்தில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளப்படமாட்டாது என இண்டிகோ விமானம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அவசர தேவை எதும் இல்லாமல் அவசர கதவை திறக்க முயற்சி செய்தது குறித்து போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.