திருமணம் தாண்டிய உறவுக்கு உதவும் வெளிநாட்டு செயலியை தரவிறக்கம் செய்து பயன்படுத்துவோரில் 20 சதவீதம் பேர் இந்தியர்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதும் ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியாக கலாசாரம், பண்பாடு இருக்கும். திருமணம் தாண்டிய உறவு என்பது மேற்கத்திய நாடுகளில் சாதாரணம். அந்த பாதையில் இந்தியாவும் அதிகாரபூர்வமற்ற முறையில் பயணிக்க துவங்கி இருக்கிறது. அந்த வகையில், பிரான்ஸை தலைமையிடமாக கொண்ட கிளீடன் (Gleeden) செயலியை, ஒட்டுமொத்தமாக 1 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
திருமணம் தாண்டிய உறவுக்கு பாலம் அமைப்பதாக கூறும் அந்த செயலியை பயன்படுத்துவோரில் 20 சதவீதம் பேர், அதாவது 20 லட்சம் பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.2009ல் அறிமுகமான இந்த செயலி, இந்திய சந்தையில் 2017ம் ஆண்டு நுழைந்தது.
![]()
|
'இந்திய தண்டனை சட்டம் 497ன் படி, திருமண பந்தத்தை மீறிய உறவு கிரிமினல் குற்றம் இல்லை' என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்த ஓராண்டுக்கு முன் அறிமுகமாகி உள்ளது. அந்த சமயத்தில் கிளீடன் செயலியை மும்பை, புதுடில்லி, பெங்களூர் போன்ற மெட்ரோ நகரங்களை சேர்ந்த 3.5 லட்சம் பயன்படுத்தி வந்தனர். தற்போது, 2023ல் பயனர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டியுள்ளது.
திருமணம் தாண்டிய உறவு அதிகரிப்பு ஏன் ?
திருமணம் தாண்டிய உறவு என்பது ஒருவகையில் நம்பிக்கை துரோகம் என நம்புபவர்கள் இந்தியர்கள். இந்தியர்கள் மத்தியில் இந்த போக்கு ஏன் அதிகரித்து வருகிறதென்பதை அறிய 2022ல் கிளீடன் சர்வே ஒன்றை நடத்தியது. அதில் பதிலளித்த பெரும்பாலோனோர் (63 சதவீதம்) சலிப்பு தான் காரணம் என கூறியுள்ளனர். அதற்கு அடுத்ததாக, துரோகம் செய்வது இயல்பான ஒன்றாக மாறி வருகிறதென 20 சதவீதம் பேரும், துணையுடனான மோதல் என 10 சதவீதம் பேரும், வேறு நபரை காதலிப்பது என 8 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
![]()
|
வெவ்வேறு காரணங்கள் திருமணத்துக்கு தாண்டிய உறவுக்கு தூண்டுகின்றன. பொதுவான காரணம், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியின்மை, தம்பதிகளுக்குள் தகவல் தொடர்பு குறைவு இது போன்ற சூழலுக்கு தள்ளுகிறது. திருமண உறவுகளுக்குள் ஏற்படும் உளவியல் சிக்கல்கள், உடல் தேவைகள் பூர்த்தியாகாதது, கல்வி, ஆளுமை மற்றும் பிற காரணிகளில் ஏற்றத்தாழ்வுகள், நம்பிக்கை துரோகமாக மாறுகிறது. மேலும் ஆன்லைனில் பெரும்பாலான டேட்டிங் நடப்பதால், திருமணத்தை தாண்டிய உறவுக்கு அங்கு பாதுகாப்பான இடத்தை தேடுவது அதிகரித்து வருகிறது.