சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்துவோம் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறவில்லை என திமுக எம்பி கனிமொழி விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‛திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்துவோம் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மது விற்பனையை குறைப்போம் என்று தான் கூறினோம்.'
ஈரோடு கிழக்கு தேர்தல் குறித்து அவர் பேசுகையில், ‛எதிர்க்கட்சியினர் பல திசையில் பிரிந்து சண்டை போட்டு வருகின்றனர். அதேபோல் அவர்கள் இணைந்தாலும் திமுக.,வுக்கு தான் வெற்றி.' இவ்வாறு அவர் கூறினார்.